சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்..!
சுமார் 5,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உரிய அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதன்படி, கல்வி முறையில் 40,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச ஊழியர்கள் 5 வருட காலம் விடுமுறை பெற்று உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ வேலைக்குச் செல்லலாம் என அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்ததாகவும் இதனைப் பயன்படுத்தி ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேலும் தெரிவிக்கையில், மூளையில்லா அரசாங்கத்தினாலேயே இந்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மாகாண சபைகளுக்கு அதிகாரம் வழங்குவதன் மூலம் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் கிடைப்பது பிரச்சினை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.