
மட்டக்களப்பு எல்லையில் சர்வமத தலைவர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிறைப்பிடிப்பு..!
மட்டக்களப்பு மாவட்டத்தில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்வதற்கு வருகைதந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், பௌத்த மதகுரு தலைமையிலான காணி அபகரிப்பு குழு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்ட பலசமய மத தலைவர்கள் ஊடகவியலாளர்கள் கொண்ட குழுவினர் இன்றையதினம் (22.08.2023) காலை மயிலத்தமடு பகுதிக்கு வாகனங்களில் சென்றனர்.
மேய்ச்சல் தரை தொடர்பான பிரச்சினைகள்
பண்ணையாளர்கள் தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரை தொடர்பாக எதிர்நோக்கும் பிரச்சினைகளை பார்வையிட்டு அவற்றை கேட்டறிவதற்காக களவிஜயம் மேற்கொண்டு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடலினை முன்னெடுத்தனர்.
இதன்பின் பிரச்சனைகள் தொடர்பாக ஆராய்ந்து மீண்டும் திரும்பி செல்லும்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக காணிகளை பிடிப்பவர்கள் மற்றும் பௌத்த மதகுரு ஒருவரும் இணைந்து அணைவரையும் வரும் வழியில் மறித்து சிறைபிடித்துள்ளனர்.




