முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்..!

முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞன்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தனது முகப்புத்தகத்தின் மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்பாவெல பிரதேசத்தை சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை (07) தம்புத்தேகம மற்றும் எப்பாவல பகுதிகளுக்கு ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ள நிலையில் சந்தேகநபர் முகப்புத்தகத்தில் பதிவிட்டதையடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்னைப்பர் துப்பாக்கிதாரி ஒருவரைக் கண்டு பிடிக்க முடியுமா? நாட்டை சீரழித்தவர் வருகிறார் என சந்தேக நபர் பதிவிட்டுள்ளார்.

பதிவு குறித்து உடனடியாக அறிந்து கொண்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் துரிதமாக செயற்பட்டு குறித்த இளைஞனைக் கைது செய்துள்ளனர்.