விளையாட்டு இல்லை : நான் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவேன்..!
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தம்மை தோற்கடிக்க சதி செய்தவர்களே பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்பது பொய்யான செய்தி எனவும், ஜனாதிபதி தேர்தலில் தான் கண்டிப்பாக போட்டியிடுவேன் எனவும் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்திருந்தும் தாம் போட்டியிடமாட்டேன் என நம்பிக்கையுடன் சிலர் கூறுவதன் மூலம் தம்மை படுகொலை செய்ய முயற்சி நடப்பதாக சந்தேகம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சவால்களை எதிர்கொள்ள தாம் அஞ்சப் போவதில்லை என்றும், 2019 ஜனாதிபதித் தேர்தலில் உள்ளக சதிகள் இருந்த போதும் 56 இலட்சம் வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.