ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் வெளியேறியது – “மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது..!

ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இராணுவம் வெளியேறியது – “மட்டக்களப்பு கெம்பஸ்” ஹிஸ்புல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டது..!

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை (20.09.2023) அதன் தவிசாளரும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனருமாகிய எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்விடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஈட்டர் தாக்கதலை அடுத்து இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட மட்டக்களப்பு பல்கலைக்கழகம் அதனை தொடர்ந்து நாட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலயே இருந்து வந்தது.

இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில் இன்று மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இராணுவத்தினரால் அதன் நிருவாகிகளிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது மட்டக்களப் பல்கலைக்கழகத்தின் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், பொது முகாமையாளர் எஸ்.எம்.தாஹிர், ஹிராஸ் பவுன்டேசன் அமைப்பின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.மும்தாஸ் மதனி, அல் கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஹாறூன் ஸஹவி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.