எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை..!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் இடைக்கால இழப்பீட்டு தொகையை பெற்று கொண்ட இலங்கை..!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான, இடைக்கால இழப்பீட்டு கொடுப்பனவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, 890,000 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 16 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீட்டு தொகையாக திறைசேரிக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த தொகை மீனவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் நாட்டின் கடற்கரையை சுத்தப்படுத்துவதற்காக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு ஏற்பட்ட செலவினமாகவும் வழங்கப்பட்டுள்ளது.