கூகுள், பேஸ்புக் போன்றவற்றை ஒழித்து நாட்டில் எதனை சாதிக்க போகின்றீர்கள்? – சஜித் கேள்வி..!

கூகுள், பேஸ்புக் போன்றவற்றை ஒழித்து நாட்டில் எதனை சாதிக்க போகின்றீர்கள்? – சஜித் கேள்வி..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நிகழ்நிலைக் காப்பு ஆணைக்குழுச் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் நாடு பாரதூரமான சூழலுக்கு முகங்கொடுக்க நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை (03) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

‘கூகுள் மற்றும் பேஸ்புக் போன்ற பலம் வாய்ந்த சமூக ஊடகங்கள் இந்த சட்டமூலத்திற்கு ஏற்கனவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன.

இந்த சட்டமூலத்தை கொண்டு வந்திருப்பதன் மூலம் தற்போது நடந்த மாற்றம் என்ன? அப்பிள், அமேசான், கூகுள், மெட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய ஏசியா இன்டர்நெட் கமிஷன் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.

இப்போது அவற்றையும் ஒழிப்பதற்கு பார்க்கின்றீர்களா அவற்றை நீக்கி விட்டு நாட்டுக்கான அந்நிய முதலீடுகளை ஊக்குவிக்க முடியுமா? பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் நிகழ்நிலை காப்புசட்டமூலம் என்பவற்றை உடனடியாக திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான சட்ட மூலங்களை கொண்டு வருவது முற்றிலும் சர்வாதிகார செயற்பாடு ஆகும்.