தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. சபாநாயகர் கருஜயசூரியவின் வருகையினை தொடர்ந்து 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கின்றார்.
தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சபையில் முன்வைப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.
2015 ஆம் ஆண்டு 8 ஆம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இந்நாட்டின் திருப்பு முனையாக அமைந்தது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது
வரவு – செலவுத்திட்டத்தின் நேரடி ஒளிபரப்பு
04:04 PM – வெளிநாட்டவர்களுக்கு கூலி அடிப்படையில் காணி வழங்கப்படும் போது அறவிடப்படும் விரி விலக்களிக்கப்படும்
04:04 PM – போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சிறுவர் பாதுகாப்புக்காக 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
04:02 PM – யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான முரண்பாடுகளை இல்லாமல் செய்வதற்கு 3 வருடங்களுக்கு 4,000 மில்லியன் ரூபாய் வழங்கப்படும்.
04:00 PM – ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக நிறுவனமொன்று உருவாக்கப்படும்
04:00 PM – அரச நிறுவனங்கள் அனைத்தும் 2018ஆம் ஆண்டு ஒரு வலயமைப்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
03:59 PM – மீனவ மற்றும் விவசாய வலயத்தை உருவாக்குவதற்கு 2,000 மில்லியன் ஒதுக்கப்படும்
03:58 PM – தங்கம் இறக்குமதிக்கான 50 உரிமப்பத்திரங்களை அறிமுகப்படுத்துவேன்.
03:58 PM – மாணிக்கக்கற்கள் ஏல விற்பனை இலங்கைக்குள் இடம்பெறுவதற்கு யோசனை ஒன்றை முன்வைக்கின்றேன்.
03:55 PM – அலங்கார மீன் தைத்தொழிலில் இளைஞர்கள் ஈடுபடுவதற்கு உந்துவேன்
03:53 PM – வவுனியாவில் புதிய பொருளாதார வலையம் உருவாக்கப்படும். கிராமிய விவசாயத்துக்கு உதவும் வகையில் சிறிய குளங்கள் மற்றும் ஏரிகள் புனரமைக்கப்படும். அதற்காக 2,000 ரூபாய் ஒதுக்கப்படும்.
03:52 PM – கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு கிராம சேவகர் பிரிவு கொத்தனி கிராமமமாக செயல்படுத்தப்படும். இதில் பொதுவசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். ஒரு கிராமத்துக்கு 1,500 ரூபாய் ஒதுக்குமாறு யோசனை முன்வைக்கின்றேன்
03:48 PM – பாக்கு சேகரிக்கும் வலயம் உருவாக்கப்படும். அந்த தொழிற்றுறையை மேம்படுத்துவதற்கு வணிக ரீதியில் பயிர்செய்வதற்காக அரசாங்கம் நிவாரணம் வழங்கும்
03:47 PM – தேங்காய் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
03:47 PM – தேயிலை தொழிற்சாலை மதீப்பீட்டைக் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சிலோன் ரீ என்ற பெயர் தொடர்ந்து இருப்பதற்கு அந்தப் பெயரை பொறிப்பது கட்டாயம் ஆக்கப்படும்
03:45 PM – உள்ளுர் கோழி இறைச்சி உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்
03:44 PM – மீனவர்களின் காப்புறுதிக்காக 1 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
03:44 PM – உள்ளுர் பால் உற்பத்தியாளர்களை மேம்படுத்துவதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
03:42 PM – உள்ர் பால் தைத்தொழிலை மேம்படுத்துவதற்கு மற்றும் இறக்குமதியை குறைப்பதற்கு நான் மதிக்கின்றேன்.எனினும் ்பால் விலை கூடியதுடன் யோகட் உள்ளிட்ட பொருட்களின் விலை குறைந்தன
03:41 PM – பழவகை மற்றும் மரக்கறி கைத்தொழிலை மேம்படுத்துவதற்கு நிவாரணம் வழங்கப்படும். இவற்றுக்குத் தேவையான உபகரணங்களுக்கான இறக்குமதி வரி விலக்களிக்கப்படும்.
03:40 PM – நெல் விவசாயிகளுக்கு மட்டும் நிவாரணங்கள் வழங்கப்படும். பெரு மற்றும் சிறு விவசாயிகளை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களுக்கு 25ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்ட
03:39 PM – விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கூடுதலான பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்வதற்கு முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்
03:36 PM – 2014ஆம் ஆண்டு அரிசி அறுவடை குறைந்திருந்தது. உரப்பாவனையினால் சிறுநீருக நோயாளர்களின எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக இன்னும் வாதப்பிரதிநிதிவாதங்கள் இடம்பெறுகின்றன
03:36 PM – அரிசி ஏற்றுமதி வர்த்தகத்தை நோக்காகக்கொண்டு அரிசி உற்பத்தியாளர்களுக்கு உதவியளிக்கப்படும். அதற்காக வெளிநாட்டுச் சந்தையை அறிமுகப்படுத்துவதற்கு முறைமையொன்று தயாரிக்கப்படும்.
03:34 PM – கீரி சம்பாவுக்கு 50 ரூபாய், சம்பா நெல்லுக்கு 40 ரூபாய், நாட்டரிசி நெல்லுக்கு 38 ரூபாய் ஆகக்குறைந்த விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனூடாக அரிசி ஒரு கிலோகிராம் 65 ரூபாய்க்கு நுகர்வுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
03:33 PM – விவசாய அறுவடையின் போது, விலைக் குறைப்பைத் தடுப்பதற்கு உயர்ந்த தரத்திலான களஞ்சியசாலைகள் உருவாக்கப்படும்.
03:32 PM – புத்துயிராக்கம் இல்லாத இடங்களை தனியார் பிரிவுகளுக்கு பெற்றுக்கொடுத்து, அதனூடாக அதனை மேம்படுத்துவதற்காக 1,000 மில்லின் ரூபாய் ஒதுக்கப்படுகின்றது.
03:31 PM – பல்பொருள் அங்காடிகளில் சிறிய மற்றும் நடுத்தரக் கைத்தொழிலாளர்களுக்கு சிறிய இடத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றேன்
03:30 PM – சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக்கர்கள் கடனை பெறும்போது பிணை வழங்குவதற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும்
03:29 PM – பெரும் வணிக நிறுவனங்களின் வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
03:29 PM – மிளகாய், செத்தல் மிளகாய், கிழங்கு உள்ளிட்ட விவசாய பொருட்களின் ஊடாக நாட்டை தன்னிறை வடிவத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்
03:29 PM – விவசாய உபகரணங்களை இறக்குமதி செய்யும் போது வரி நிவாரணங்கள் வழங்கப்படும்
03:28 PM – புதிய விவசாயக் கொள்கையை ஏற்படுத்துவதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் கவனம் செலுத்தியுள்ளனர்.
03:27 PM – நிகர, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கு கடன் வழங்குவதற்காக இணைந்த கூட்டுத்திட்டம் அமுல்படுத்தப்படும்.
03:26 PM – சிறு பொருளாதாரத் தோட்டங்கள் மொனராகலை உட்பட பல இடங்களில் முன்னெடுக்கப்படும்.
03:25 PM – சகல நிதி நிறுவனங்களும் பரிந்துரைக்கப்பட்ட அதிகார சபையின் கீழ் வருடாந்தக் கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்.
03:24 PM – சிறு மற்றும் மத்தியதர வர்த்தகர்களின் மேம்பாட்டுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்.
03:23 PM – வரவு -செலவுத்திட்டத்தின் யோசனைகளை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைக்கின்றார்.