பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி – ரிஷாட், முஜிபுர் ரஹ்மான் பங்கேற்பு..!

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி – ரிஷாட், முஜிபுர் ரஹ்மான் பங்கேற்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி – ரிஷாட், முஜிபுர் ரஹ்மான் பங்கேற்பு!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வரும் மோதலில், பலஸ்தீன மக்கள் மீதான அத்துமீறலை கண்டித்து, அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனங்களை வெளியிட்டும் இன்று (13) கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டம், கொழும்பு – 7, தெவட்டகஹ ஜும்ஆ பள்ளிவாசல் அருகில், ஜூம்ஆ தொழுகையின் பிற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களான
நிந்தவூர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அஷ்ரப் தாஹிர், அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி அன்சில், சகோதரர் பகத் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.