‘இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையேயான தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும்’ – ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தல்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
‘கனரக ஆயுதங்கள் மூலம் தாக்குவதால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காண முடியும் எனவும், பேச்சுவார்த்தை நடத்தி அமைதி திரும்ப வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இரத்தம் சிந்துவதை நிறுத்த வேண்டும் என்பதே ரஷ்யாவின் குறிக்கோளாகும்.அமைதி திரும்ப அனைத்து வழிகளிலும் ஒருங்கிணைப்பு வேலைகளை ரஷ்யா மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.