தென்காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை – இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்..!

தென்காசாவில் யுத்த நிறுத்தம் இல்லை – இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  தென்காசாவில் யுத்த நிறுத்தம் என வெளியாகியுள்ள செய்திகளை இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.

ரபா எல்லை திறப்புடன் தென்காசாவில் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படலாம் என எகிப்திய வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்திருந்தன.

எனினும் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அலுவலகம் இதனை நிராகரித்துள்ளது.

வெளிநாட்டவர்களை வெளியே கொண்டுவருவதற்காக யுத்தநிறுத்தமோ மனிதாபிமான உதவியோ இல்லை என இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.