நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியது..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் பெய்துவரும் அடை மழை காரணமாக காலி – மாத்தறை பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
மேலும், மிரிஸ்ஸ நகரின் பல வர்த்தக நிலையங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முறையற்ற வடிகால் அமைப்பு மற்றும் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டுமானங்களால் நகரம் நீரில் மூழ்கி உள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.