பஹ்ரைனில் தொழிலுக்குச் சென்று, பலஸ்தீனர்களுக்கு எதிராக பதிவிட்ட, வைத்தியர் கைது – உடனடியாக பணியும் நீக்கம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலஸ்தீனத்தில் மருத்துவமனை மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவாகவும், பாலஸ்தீன மக்களுக்கு எதிராகவும், சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வந்த பஹ்ரைன் தனியார் மருத்துவமனையில் சிறப்பு மருத்துவராக பணிபுரிந்து வந்த இந்தியரான டாக்டர் சுனில் ராவ் பஹ்ரைன் காவல்துறையால் நேற்று -19- கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் டாக்டர் சுனில் ராவ், மருத்துவமனை நிர்வாகத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டார்.