மொட்டு கட்சிக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை எம்மால் கவிழ்க்க முடியும் – எஸ். பி. திஸாநாயக்க..!

மொட்டு கட்சிக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை எம்மால் கவிழ்க்க முடியும் – எஸ். பி. திஸாநாயக்க..!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு எதிராக செயற்பட்டால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க கூறுகிறார்.

நேற்று (திங்கட்கிழமை 23) இரவு தனியார்  தொலைக்காட்சி ஒன்றில்  ஒளிபரப்பான  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர்  இவ்வாறு தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் அனைத்து அமைச்சர்களும் நீக்கப்பட்டாலும் நீங்கள் காத்திருப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்று தொகுப்பாளர் கேட்டதற்கு

இல்லை, இல்லை எம்மால் ஆட்சியைக் கவிழ்க்க முடியும். எம்மால் செய்யக்கூடிய பல விடயங்கள் உள்ளன. வரவு – செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதுடன்  பல விடயங்களைச் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்தார்.