சில நேரங்களில் நான் கமராவின் பின்னால் நின்று அழுகின்றேன் – காசா ஊடகவியலாளர்..!
பிபிசி
சிக்னல் கிடைக்கும் இடங்களில் அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கின்றார் – தனது போனை சார்ஜ் செய்வதற்கு போதுமான மின்சாரம் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் அவர் தொலைபேசி அழைப்பை மேற்கொள்கின்றார்.
உணவு கிடைக்கும்போது அவர் உண்கின்றார்- பாழடைந்த ஒரு இடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்கு அவர் பயணிக்கின்றார்.பெட்ரோல் கிடைக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் வரை அவர் பயணிக்கின்றார்.
அதேவேளை மஹ்மூட் பாசம் தனது மனைவி, 11 மாத குழந்தை குறித்தும் கவலையுடன் உள்ளார், அவர் அவர்களை குண்டுவீச்சிலிருந்து காப்பாற்றவேண்டும், இதன் காரணமாக அவர் காலையில் பணிக்கு செல்லும் போது அவர்கள் தான் இரவு திரும்பிவரும்போது அதே இடத்திலிருப்பதை உறுதி செய்கின்றார்.
அவரால் திரும்பி வரமுடிந்தால் மாத்திரமே இரவு அவர்களை அவர் சந்திக்கலாம் – குண்டுவீச்சு காரணமாக வீதிகள் சில இடங்களில் சேதமடைந்துள்ளன- அல்லது பயணம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது.
காசாவில் இந்த நாட்களில் அவர் யுத்தத்தின் தயவில் வாழ்கின்றார் – யுத்தம் எந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது – அது எதனை கொண்டுபோகின்றது.
மஹ்மூட் மக்களின் வலிகளை துயரங்களை அர்ப்பணிப்புடன் பதிவு செய்பவர். யுத்தம் மூன்று வாரங்களிற்கு முன்னர் ஆரம்பித்தில் இருந்து அவர் மருத்துவமனைகளுக்கும் அகதிமுகாம்களுக்கும் இடையில் அலைந்துகொண்டிருக்கின்றார். களைப்பை ஏற்படுத்தும் விதத்தில் அவர் தொடர்ந்து செல்கின்றார், குண்டுவெடிப்புகளின் நடுவில் அவர் அங்கு செல்கின்றார்.
பிபிசியின் காசா செய்தியாளருடன் இணைந்து பணியாற்றும் இவர் ஒரு சுயாதீன ஊடகவியலாளர் –
தொடர்ச்சியான விமானதாக்குதல்களில் சிக்குண்டுள்ள மக்களின் துயரங்களை பிபிசி வெளிப்படுத்துவதற்கு இவர் போன்றவர்கள் உதவியுள்ளனர்.
பல மணிநேரம் முயற்சி செய்த பின்னர் என்னால் அவரை தொடர்புகொள்ள முயன்றவேளை அவர் தனது ஊடகப்பணி தனக்கு எவ்வாறான மன உளைச்சல்களை ஏற்படுத்துகின்றது என்பதை தெரிவித்தார்.
நான் பார்க்கும் விடயங்களை பார்ப்பது எவ்வளவு கடினமாக உள்ளதோ அந்தளவிற்கு அந்த செய்தியை வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு நான் முயல்கின்றேன் என அவர் தெரிவித்தார்.
சிலவேளைகளில் நான் கமராவின் பின்னால் நின்று அழுகின்றேன் – அமைதியாக இருப்பது ஒன்றை மாத்திரம் என்னால் செய்ய முடிகின்றது என்கின்றார் அவர்.
மனித உயிர்கள் தொடர்ச்சியான துயரத்தை அனுபவிக்கின்ற நிலையில் காசாவில் பணியாற்றும் எனக்கு தெரிந்த பல பத்திரிகையாளர்கள் இயலாமையை உணர்கின்றனர்.
மிகப்பெரும் எண்ணிக்கையானவர்களிற்கு உதவவேண்டிய சூழ்நிலை காணப்படுகின்ற நிலையில் எவ்வாறு உதவுவது? உணவையும் முதலுதவியையும் வழங்கவேண்டிய நிலையிலிருந்தால் நீங்கள் உங்கள் ஊடகதொழிலில் எவ்வாறு ஈடுபடுவது.
நாங்கள் மனிதாபிமான பணியாளர்களோ அல்லது மருத்துவர்களோ இல்லை நாங்கள் மனிதர்கள்.
அந்த மண்ணில் பிறந்த மஹ்மூட் போன்றவர்களின் வலி இன்னமும் அதிகமானது – என்னை போன்ற வெளிநாட்டு செய்தியாளர்கள் விமானம் ஏறி ஊருக்கு செல்லலாம், – யுத்தத்தின் நினைவுகள் எங்களை பின்தொடரலாம், நாங்கள் நேசிப்பவர்களை போல எங்களிற்கும் உடல்ரீதியான பாதுகாப்பு உள்ளது.
காசாபள்ளத்தாக்கு என்பது மிகவும் சிறிய நிலப்பரப்பு – 366 சதுரகிலோமீற்றர் -இதன் காரணமாக தனக்கு தெரிந்த யாராவது ஒருவர் யுத்தத்தில் சிக்குண்டிருப்பது மஹ்மூட் பார்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
நான் ஒரு பத்திரிகையாளான் நான் பார்ப்பதை தெரிவிப்பதே எனது தொழில் என அவர் என்னிடம் தெரிவித்தார்.
ஆனால் சிலவேளைகளில் நான் எனது பணியை நிறுத்திவிட்டு இந்த குழந்கைளுடன் சிறிது நேரத்தை செலவிடவேண்டியுள்ளது அவர்களிற்கு குடிநீரை வழங்கவேண்டியுள்ளது அவர்களிற்கு உன்ன தேவை என அறிந்து அதனை வழங்கவேண்டியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.