சம்மாந்துறையில் இலஞ்ச ஊழல் பற்றிய பயிற்சி..!

சம்மாந்துறையில் இலஞ்ச ஊழல் பற்றிய பயிற்சி..!

சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற அரச உத்தியோகத்தர்களுக்கான ஊழல் எதிர்ப்பு பற்றிய ஒரு நாள் பயிற்சி சம்மாந்துறை உதவி பிரதேச செயலாளர் யு.எம் அஸ்லம் தலைமையில் இன்று(01) இடம் பெற்றது.

இந் நிகழ்ச்சி திட்டத்தில் பயிற்றுவிப்பளாராக  சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா கலந்து கொண்டு ஊழல் மற்றும் இலஞ்சம் என்றால் என்ன ? ,ஊழலைத் தடுப்பதற்கான வழிவகைகள் போன்ற பல விடயங்கள் இவ் ஒரு நாள் பயிற்சியில் கலந்துரையாடப்பட்டதோடு. ஊழல் சம்பந்தமான ஒரு சிறு திரைப்படக்காட்சியும் ஒளிபரப்பட்டு அதனுள் இலஞ்ச ஊழல் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டு விடையளிக்கப்பட்டது. 

இந் நிகழ்வில் கிராம சேவையாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நடாளாவிய ரீதியில் அனைத்து திணைக்களங்களுக்கும் இவ்வாறான நிகழ்ச்சி திட்டத்தினை ஒரு வருட காலத்தினுள் நடைமுறைப்படுத்துவதற்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் உள்ள திணைக்களங்களில் கடமை புரியும் 1000 அரச உத்தியோகத்தகர்களுக்கு பயிற்சி வழங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதோடு  இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பயிற்றுவிப்பாளராக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா  நியமிக்கப்பட்டுள்ளார். இதன் முதல் கட்டமாக  சம்மாந்துறை பிரதேச செயலக 50 உத்தியோகத்தகர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது