பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத்தயாராகும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம்..!

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நாளை  வியாழக்கிழமை (02) முதல் மாகாண ரீதியில் 24 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளனர் . 

நாளை (02) ஊவா மாகாணத்திலுள்ள அனைத்து அரச வைத்தியசாலைகளின் மருத்துவர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர் . 

இதனையடுத்து முறையே நவம்பர் 03, 06, மற்றும் 07 ஆம் திகதிகளில் வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளனர் . 

நவம்பர் 08 ஆம் திகதி , மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவ அதிகாரிகள் அடையாள பணிப்புறக்கணிப்பை  நடத்தவுள்ளனர் . 

நவம்பர் 09  , ஆம் திகதிகளில்  தென் மற்றும் வடமத்திய மாகாணங்களின் மருத்துவ அதிகாரிகளும்    நவம்பர் 10 ஆம் திகதிகளில் மேல் மாகாணத்தின்  மருத்துவ அதிகாரிகளும் அடையாள பணிப்புறக்கணிப்பை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது .