
மொஹமட் நசீர் மொஹமட் ஆதில் என்பவரைத் தேடும் சுங்கத் திணைக்களத்தினர்..!
சுங்கம் தொடர்பான விசாரணை ஒன்றுக்காக சந்தேகத்தில் ஒருவரை சுங்க அதிகாரிகள் தேடி வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இவர் இல. 51, காமல்வத்த, கொள்ளுப்பிட்டி, கொழும்பு-03 என்ற முகவரியில் வசிக்கும் மொஹமட் நசீர் மொஹமட் ஆதில் என்ற பெயருடைய நபர் ஆவார்.
மேற்குறிப்பிட்ட நபர் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் 011 – 247 1471 , 011 – 243 1854 அல்லது 070 438 7112 என்ற தொலைபேசி இலக்கங்களினுடாக சுங்கத் துறையின் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் தெரிவிக்குமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.