ஜனாதிபதிக்குத் தெரியாமல் நியமிக்கப்பட்டதா இடைக்கால கிரிக்கெட் குழு? இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட முடிவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (06) மாலை அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி அறிந்திருக்கவில்லை என உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய இடைக்கால குழுவிற்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை தொடர்பு கொண்டு விசாரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சித்ததாகவும், அது இதுவரை வெற்றியளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.