டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்..!

டெல்லியில் மீண்டும் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நேபாளத்தில் இன்று (திங்கட்கிழமை) மாலை ஏற்பட்ட நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

நேபாளத்தில் கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததோடு, பெரும் சேதமும் ஏற்பட்டுள்ளது.

நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லியில் சில பகுதிகளில் உணரப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) மாலை 4.16 மணியளவில் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்போது டெல்லியில் ஒரு சில பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

அதுபோல வாராணசி, பாட்னா, குருகிராம், ஜெய்ப்பூர் ஆகிய பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.