வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எந்த காரணமும் இல்லை, இது மக்கள் எதிர்பார்க்கும் வரவு செலவுத்திட்டம்..!

வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எந்த காரணமும் இல்லை, இது மக்கள் எதிர்பார்க்கும் வரவு செலவுத்திட்டம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இதுவரையில் மக்கள் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

வரவு செலவுத் திட்டத்தை எதிர்ப்பதற்கு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எந்த காரணமும் இல்லை.

எவ்வாறாயினும், இன்று ஆளும் கட்சியினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட ஆவணமானது புதிதாக ஒன்றைச் செய்யக்கூடிய வரவு செலவுத் திட்டம் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

தேர்தலை இலக்கு வைத்து கவர்ச்சிகரமான யோசனைகளை அரசாங்கம் முன்வைக்க முடியும் என அதன் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.