அல்ஷிபா மருத்துவமனை இஸ்ரேல் தரைப்படையால் சுற்றிவளைப்பு..!

அல்ஷிபா மருத்துவமனை இஸ்ரேல் தரைப்படையால் சுற்றிவளைப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காசா நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அல்ஷிபா மருத்துவமனையை இஸ்ரேல் தரைப்படை சுற்றிவளைத்துள்ளது.

அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் இருந்து இஸ்ரேல் படையினர் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து. இதற்கு இஸ்ரேல் படை பதிலடி கொடுத்ததுடன், காசாமுனையின் அல்ஷிபா மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் குழுவின் தலைமையிடம் அமைந்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில்,அல்ஷிபா மருத்துவமனைக்குள் இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் இன்று அதிரடியாக நுழைந்துள்ளனர். மருத்துவமனையின் தரைத்தளம் உள்பட அறுவைசிகிச்சை மற்றும் அவசரசிகிச்சை பிரிவுகள் அமைந்துள்ள பகுதிகளிலும் நுழைந்து இஸ்ரேல் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.