கிரிக்கெட் விவகாரத்தில் தீர்பளித்த நீதிபதிகளை விமர்சித்து பாராளுமன்றம் பெருந்தவறு செய்துவிட்டது – ஜனாதிபதி அதிரடி கருத்து..!

கிரிக்கெட் விவகாரத்தில் தீர்பளித்த நீதிபதிகளை விமர்சித்து பாராளுமன்றம் பெருந்தவறு செய்துவிட்டது – ஜனாதிபதி அதிரடி கருத்து..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் விவகாரத்தை அரசியலாக்கி தவறு செய்துவிட்டீர்களென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் ஆற்றிய உரையொன்றில் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,
அரசியலை கிரிக்கெட்டில் கலக்கவேண்டாமென ஐ.சி.சி சொல்கிறது. ஷம்மி சில்வா உட்பட நாங்கள் யாரையும் காப்பாற்றவில்லை. கிரிக்கெட் விவகாரத்தில் பாராளுமன்றம் அதனை விவாதித்து நீதிபதிகளை ஏசிப்பேசி தவறு செய்துவிட்டது. அப்படி செய்யக் கூடாது. நீதிபதிகள் கிரிக்கெட் விவகாரத்தில் தீர்ப்பளித்தார்கள் என்று கூறி அப்படி செய்ய முடியாது. சிறப்புரிமைகள் என்ற போர்வையில் எல்லாவற்றையும் செய்ய முடியாது.
பாராளுமன்றம் நீதிமன்ற தீர்ப்புக்களை விமர்சிக்கலாம். ஆனால் நீதிபதிகளை விமர்ச்சிக்கக் கூடாது. இப்படி முன்னர் ஒருபோதும் நடக்கவில்லை. நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் நாங்கள் சில விடயங்களை மட்டுமே செய்யலாம். நீதிமன்றத்துடன் சண்டையிட முடியாது, கூடாது.
அடுத்ததாக அரசியலமைப்பு சபையின் செயற்பாடுகள் பற்றி கூறவேண்டும். ஊழல் எதிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவிற்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை. அதுஏன்?அந்த வேலைகளை அது சரியாக செய்ய வேண்டும். சபையின் செயற்பாடுகளை ஆராய பாராளுமன்ற தெரிவிக்குழு அமைக்க வேண்டும். அரசியலமைப்பு சபை முன்னர் ஒரு போதும் இப்படி நடக்கவில்லை – என்றார் ஜனாதிபதி..