
மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார்! புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்து இருக்கவேண்டும்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தவறு செய்துவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற வரவு – செலவுத் திட்டத்தின் மீதான குழுநாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டனர் ஆனால், அவ்வமைப்பின் நிழலாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செயற்படுகின்றனர்.
புலிகளை அழித்த கையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்து இருக்கவேண்டும்.
மஹிந்த ராஜபக்ஷ அதனை செய்யாது தவறு செய்துவிட்டார் என சுட்டிகாட்டியுள்ளார்.