
சரத்வீரசேகரவின் மூளையைப் பரிசோதனை செய்ய வேண்டும் – அநுரகுமார திஸாநாயக்க..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிடும் ஆளும் தரப்பு உறுப்பினரின் (சரத்வீரசேகரவின்) மூளையைப் பரிசோதனை செய்ய வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. தெரிவித்துள்ளார்.
அத்துடன், யுத்தம் நிறைவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் நாட்டில் தேசிய நல்லிணக்கம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23.11.2023) நடைபெற்ற 2024 ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.