முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகச் சென்று, அவரை கொல்வேன் என கூறிய இராணுவ சிப்பாய் கைது..!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகச் சென்று, அவரை கொல்வேன் என கூறிய இராணுவ சிப்பாய் கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு முன்பாகச் சென்று, அவரை கொல்வேன் என கூறியவர் கைது செய்யப்பட்டதாக ​பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு- 7, விஜேராம மாவத்தையில் உள்ள இல்லத்தின் முன்பாக கைதானவர் மகிந்தவை கொல்வேன் என சவால் விடுத்ததாக கூறப்படுகின்றது.

கண்டுபிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன்

மஹிந்த ராஜபக்ஷவை ஒரு வாரத்திற்குள் கண்டுபிடிக்க முடியாத வகையில் கொலை செய்து விடுவேன் என்று கூறிய முன்னாள் இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதாக கறுவாத்தோட்ட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைதானவர் பமுனுகம கிரிவெல ஹொரபவிட்ட, பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் தனது சகோதரியின் கிருலப்பனை வீட்டில் தங்கி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.