
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் இன்று போராட்டம்..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (27) அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளன.
இன்று நண்பகல் 12.00 மணிக்கு போராட்டம் நடத்தப்படும் என அதன் அழைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்திருந்தார்.
20,000 சம்பள அதிகரிப்பு, அதிகரிக்கும் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை ஜனவரி முதல் சம்பளம் வழங்குதல், 2016 ஆம் ஆண்டு முதல் இழந்த முழு ஓய்வூதிய உரிமையை மீட்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் சிறந்த பதில் வழங்காவிடின் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.