எனக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு இல்லை..!

எனக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு இல்லை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டு ஆசன அமைப்பாளர் பதவியை பெற்றுக்கொள்ளும் எதிர்பார்ப்பு இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

பதினெட்டு கட்சிகளை உள்ளடக்கிய இலட்சிய அரசியலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததன் பின்னர் கொழும்பு 7, தேசிய நூலகம் மற்றும் ஆவணச் சேவைச் சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் இது குறித்து கருத்து தெரிவிக்கையில்;

‘அடுத்த ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என நம்புகிறோம். நான் அந்த செயல்முறையின் ஆதரவாளராக வேலை செய்கிறேன்.

எனக்கு வேறு நம்பிக்கை இல்லை. இந்த இயக்கம் பதவி சலுகைகளை முன்வைத்து கொள்கைகளை காட்டிக் கட்டியெழுப்பப்படவில்லை. நான் பதவிகள் சலிகைகள் குறித்து கலந்துரையாடியதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார். நான் எந்த விவாதமும் நடத்தவில்லை.”

இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்கவும் கலந்து கொண்டதுடன், இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தெரிவிக்கையில்; ‘எங்கு செல்வது, யாரிடம் பேசுவது என்று இன்னும் தீர்மானிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.