போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கிராம அலுவலர் கைது..!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட கிராம அலுவலர் கைது..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கிராம அலுவலர் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக பொலிசாருக்கு இரகசிய தகவல் மூலம் அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக குறித்த கிராம அலுவலர் ஹெரோயின், ஐஸ் உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு, அவரும் குறித்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து வந்த நிலையில் நேற்றையதினம் (15) குறித்த கிராம அலுவலர் மற்றும் இவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

பாலநாதன் சதீஸ்