எமது கட்சியில் இருந்தும் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : விமல்..!

எமது கட்சியில் இருந்தும் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் : விமல்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தனது கட்சியில் இருந்து ஒருவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் ஒன்றின் முகம் கொடுக்க உள்ளதால், உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என நிருபர் கேட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அந்த வேட்பாளர் நீங்களா என கேட்ட போது, அது தொடர்பில் பின்னர் அறிவிப்பதாக தெரிவித்தார்.

தற்போதைய ஜனாதிபதியும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இருந்தால், அவருக்கு எதிராக களம் இறங்க வேண்டி இருக்குமே என நிருபர் கேட்டபோது,

ஆம்.. அவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவாறாக இருந்தால் அவருக்கு எதிராக களம் இறங்குவோம் என மேலும் தெரிவித்தார்.