கெஹலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த மருந்துகளை அவருக்கே வழங்கும் சிறைச்சாலை வைத்தியசாலை..!

கெஹலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த மருந்துகளை அவருக்கே வழங்கும் சிறைச்சாலை வைத்தியசாலை..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

சிறைச்சாலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சராக செயற்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகின்றார்