மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படலாம்..!

மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படலாம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வின் படி மின்சாரக் கட்டணங்கள் 20 முதல் 25 சதவீதம் வரை குறைக்கப்படலாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் மற்றும் இலங்கை மின்சார சபையின் அண்மைய நிதி அறிக்கைகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சேவையாளர் சங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளதுடன், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தீர்மானங்களின் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையில் தற்போதும் நுகர்வோரின் நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளது.

எதிர்வரும் மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஆணைக்குழுவின் தலைவரிடம் கலந்துரையாடல் ஒன்றையும் தொழிற்சங்கம் கோரியுள்ளது.

இதேவேளை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஒழுங்குமுறைப் பொறுப்பை நிறைவேற்றுவது அவசியமானது எனத் தொழிற்சங்கம் மேலும் வலியுறுத்துகிறது.