பல நாட்கள் காசாவில் தாயை தேடியலைந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் – இறுதியில் நடந்தது என்ன..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாலஸ்தீன பத்திரிகையாளர் ஒருவர் பலநாட்கள் தேடியலைந்த பின்னர் தனது தாயின் உடலை காசா மருத்துவமனையின் கண்டுபிடித்துள்ளார்.
நான் தாயின் உடலை மருத்துவமனையின் தரையில் கண்டுபிடித்தேன் அவர் உறங்கிக்கொண்டிருந்த விதத்தை வைத்து அவரை கண்டுபிடித்தேன் என அந்த பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளரின் தாய் நைமா குரைகியா இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டார் என அந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது மகன் முகமட் அவரை அல்சிபா மருத்துவனையில் தேடினார்.
இரண்டு வாரங்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டிருந்த இஸ்ரேலிய இராணுவம் அங்கிருந்து பின்வாங்கிய பின்னர் அவர் தனது தாயை தேட தொடங்கினார்.
அம்மா எனக்கு மருந்து உணவு தண்ணீர் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவித்தார் நான் தரையில் உறங்கவேண்டிய நிலையில் இருக்கின்றேன் நீ எங்கு இருக்கின்றாய் என்பதே அவர் இறுதியாக என்னுடன் பேசிய விடயம் என தெரிவித்துள்ள பாலஸ்தீனிய ஊடகவியலாளர் நான் அவருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டவேளையே அவர்இதனை தெரிவித்தார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நான் அவரின் ஒரே மகன் என முகமட் தெரிவித்துள்ளார்.நான் எப்போதும் அவருடன் இருந்தேன் எனது வாழ்க்கை முழுவதும் அவருடன் இருந்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது அம்மா என்னை தனியாக விட்டுவிட்டு சென்றுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரை இந்த இடத்தில் பார்த்தேன் உறங்குவது போல காணப்பட்டார் வீட்டில் உறங்குவது போல காணப்பட்டார், நான் அருகில் சென்று நான் இங்கு இருக்கின்றேன் எழும்புங்கள் அம்மா என்றேன் என தெரிவித்துள்ள பாலஸ்தீன ஊடகவியலாளர் எனது அம்மா மிக அருகிலிருந்து சுட்டுக்கொன்றார்கள் என நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
என்னை தேடி வெளியே வந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
நான் அவ்வேளை அவரை காணவில்லை அவர் என்னை தேடும் போது நான் அவரை பார்த்திருக்கவேண்டும் அவரை அவ்வேளை நான் பார்த்திருந்தால் கட்டியணைத்திருக்கலாம் ஆபத்திலிருந்து மீட்டு அழைத்து சென்றிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் முகம் அடையாளம் காணமுடியாத நிலையில் காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மகன் காசாவின் அவலத்தை பதிவு செய்வதற்காக காசாவிலேயே இருக்க தீர்மானித்ததால் நைமாவும் அங்கிருந்து வெளியே மறுத்துள்ளார்.
இது எனது அம்மாவின் ஆடைகள் என ஆடைகளை கையில் வைத்தபடி அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
அம்மாவின் வாசனையை உணர்வதற்கு என்னிடம் எஞ்சியிருக்கின்ற பொருள் இதுதான் இந்த ஆடை எனக்கு மிகவும் பிரியமானது நான் எங்கு சென்றாலும் இதனை என்னுடன் வைத்திருக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
ஊடகவியலாளரின் 65 வயது தாய் இடம்பெயர்ந்து மருத்துவமனையில் தஞ்சமடைந்தார்.
அல்சிபா மருத்துவமனையில் தங்கியிருந்த ஆயிரக்கணக்கானவர்களில் அவரும் ஒருவர்.
இஸ்ரேலிய படையினர் தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்தவேளை குண்டுவீச்சு மற்றும் ஆட்டிலறி சத்தங்களால் எனது தாய் அச்சமடைந்தார் என தெரிவித்துள்ளார் காசாவை சேர்ந்த அந்த ஊடகவியலாளர்
அம்மா கழிவறைக்கு செல்வதற்கு கூட அச்சமடைந்தார் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை நிலைமை மிக மோசமானதாக காணப்பட்டது டாங்கிகள் எல்லா இடங்களிலும் எங்கனை முற்றுகையிட்டன எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
அல்சிபா மருத்துவமனைக்குள் தாங்கள் ஆயுதமேந்தியவர்களுடன் மோதலில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய படையினர்தெரிவித்துள்ளனர்.
அல்ஸிபா மருத்துவமனைக்குள் பல மனித புதைகுழிகளை அடையாளம் கண்டுள்ளனர்.
அவற்றிற்குள் சடலமாக மீட்கப்பட்ட பலர் நோயாளிகள் பொதுமக்கள் என அடையாளம் காணப்பட்டனர்.
அம்;மாவின் ஒரே மகன் என்ற அடிப்படையில் உலகிற்கும் உலகின் தாரளவாதிகளுக்கும் பொறுப்புக்கூறல் வெளிப்படை தன்மை போன்றவற்றிற்காக குரல் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளிற்குமான எனது ஒரே செய்தி என்னவென்றால் இந்த பெண்ணிற்கு என்ன நடந்தது என்பதே என காசா ஊடகவியலாளர் தெரிவிக்கின்றார்.
அவர் இருதய நோய் பாதிப்பு பார்வை குறைவு நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர் அம்மாவால் ஒழுங்காக நடக்ககூட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.