வாஸ் குணவர்தனவின் மரண தண்டனை குறித்து வர்த்தகர் சியாமின் தந்தை வெளியிட்ட கருத்து நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் எனத் தெரிவித்து அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சவாலாக சியாமின் தந்தை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிய வாஸ் குணவர்தனவை அவர் நிரபராதி எனக் கூறியுள்ளார் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.