தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய வி.ஐ.பிக்களின் நிலைஎன்ன?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முக்கிய விஐபிக்கள் பலர் முன்னிலை பெற்றுள்ளனர்; இன்னும் சிலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், தி.மு.க. கூட்டணி 38 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி 2, பா.ஜ.க. கூட்டணி 2 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளன.
அந்தவகையில், முன்னிலை பெற்றவர்கள் விபரம் வருமாறு…
தர்மபுரியில் பா.ம.கவின் – சௌமியா.
நீலகிரியில் தி.மு.கவின் – ஆ.ராசா.
குமரியில் பா.ஜ.கவின் – பொன்.ராதாகிருஷ்ணன்.
ஸ்ரீபெரும்புதூரில் – டிஆர் பாலு.
மத்திய சென்னையில் தி.மு.கவின் – தயாநிதி.
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் – திருமாவளவன்.
தென் சென்னையில் – தமிழச்சி தங்கப்பாண்டியன்.
சேலத்தில் – டி.எம்.செல்வகணபதி.
திருச்சியில் ம.தி.மு.கவின் – துரை வைகோ ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்.
பா.ஜ.இ சார்பில் களமிறங்கிய கோவையில் – அண்ணாமலை, நீலகிரியில் – எல்.முருகன், தென் சென்னையில் – தமிழிசை சௌந்திரராஜன், நெல்லையில் – நயினார் நாகேந்திரன், இராமநாதபுரத்தில் சுயேச்சையாகக் களமிறங்கிய – பன்னீர்செல்வம், தேனியில் அ.ம.மு.கவின் – டிடிவி தினகரன் ஆகியோர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.