ஆசை பயம் : சஜித் – அநுர விவாதம் நடக்குமா..?
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இன்று (06) எந்த நேரத்திலும் விவாதம் நடத்த அநுர குமார திஸாநாயக்க தயாராக இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் செயற்குழு உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐக்கிய மக்க கட்சியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என்று அவர் கூறுகிறார்.
இன்றைக்கு பின்னர் கட்சியின் தலைவர்களுக்கு இடையில் விவாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கவில்லை என நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், இது தொடர்பான விவாதம் தொடர்பில், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் இந்த விவாதங்களுக்கு தமது கட்சி தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார்.