குசல் பெரேராவின் அதிரடி ஆட்டத்தில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு இமாலய இலக்கு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லங்கா பிரீமியர் லீக் தொடரின் நான்காவது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணிக்கு 192 ஓட்டங்களை வெற்றியிலக்காக தம்புள்ளை சிக்சர்ஸ் அணி நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணி 20 ஓவர் முடிவில் 02 விக்கட்டுக்களை இழந்து 191 ஓட்டங்களைப் பெற்றது.
குறித்த போட்டியில் குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 102 ஓட்டங்களையும், நுவனிது பெர்னாண்டோ 40 ஓட்டங்களையும், மார்க் சப்மன் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில் ஜப்னா கிங்ஸ் அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 02 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
அதன்படி ஜப்னா கிங்ஸ் அணி 192 ஓட்டங்கள் என்ற இலக்கை நேக்கி துடுப்பெடுத்தாடி வருகிறது.
இதேவேளை, லங்கா பிரிமியர் லீக் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று (03) இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது.