சஜித்துக்கு சிரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு..!
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தயாசிறி தரப்பினரின் ஆதரவை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு வழங்க தீர்மானித்துள்ளனர்.
இன்று கொழும்பில் ஒன்று கூடி அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கலந்துரையாடியதன் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.