பாராளுமன்றத்தில் உணவு உண்ணமாட்டோம் , வாகனம் பெறமாட்டோம் என நாம் கூறவில்லை
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றத்தில் உணவு அல்லது வாகனம் பெறமாட்டோம் என தாம் கூறவில்லை என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் திரு.பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினரகள் சமைத்துக்கொண்டு வந்து பணியாற்ற முடியாது, ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்படுவது போன்று அவர்களுக்கும் உணவு வழங்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 15 ரூபாவாக இருந்த உணவின் விலையை இருமுறை உயர்த்துவதற்கு முன்மொழிந்ததாக அமைச்சர் கூறினார்.
நாட்டில் உயர் அரசியல் சூழல் உருவாகும் போது மிகக் குறுகிய அரசியல் இலக்குகளை அடைவதற்காக செயற்பட வேண்டாம் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.