எம்பிலிப்பிட்டிய வாகன விபத்தில் ஒருவர் பலி
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எம்பிலிப்பிட்டிய-மொரகெட்டிய வீதியின் மொரகெட்டிய விகாரைக்கு அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எம்பிலிப்பிட்டிய திசையிலிருந்து மொரகெட்டிய நோக்கி பயணித்த கார் ஒன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிந்துள்ளார்.
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் எம்பிலிப்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.