முன்னாள் கலால் ஆணையாளர் நாயகத்திற்கு வௌிநாடு செல்ல அனுமதி

முன்னாள் கலால் ஆணையாளர் நாயகத்திற்கு வௌிநாடு செல்ல அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பிரதிவாதியாக தனிப்பட்ட தேவைகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி விடுத்த கோரிக்கையை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட சீராக்கல் மனுவை பரிசீலித்த பிரீதி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கி நீதிமன்றத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவர் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,
இதன்போது, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம், நீதிமன்றத்தின் அனுமதியின்றி வெளிநாடு செல்லமாட்டேன் என, உயர் நீதிமன்றில் உறுதிமொழி ஒன்றை வழங்கியிருந்தார்.

முன்னாள் கலால் ஆணையாளர் நாயகம் சார்பில் சீராக்கல் மனுவை சமர்ப்பித்த ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா, தனது வாடிக்கையாளர் தனிப்பட்ட நோக்கத்திற்காக அவுஸ்திரேலியா செல்ல விரும்புவதாகவும், அதன் படி ஜனவரி 22 முதல் பெப்ரவரி 28 வரையிலான காலப்பகுதியினுள் தனது கட்சிக்காரர் வௌிநாடு செல்ல அனுமதிக்குமாறும் நீதிமன்றத்திடம் கோரினார்.

இந்த கோரிக்கைக்கு மனு தாக்கல் செய்ய மதுபான ஆலை உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அதன்படி, முன்னாள் கலால் ஆணையாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு அனுமதி அளித்து நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது.

COMMENTS

Wordpress (0)