மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள்?

மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகள்?

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகளை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பிலான பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும், இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மாகாண மட்டத்தில் குற்ற விசாரணைப் பிரிவுகளை நிறுவுவதன் நோக்கம் குற்றங்களை தடுப்பதும், விசாரணைகளை நெறிப்படுத்துவதுமாகும்.

குறித்த பிரிவானது பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் செயல்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு ஏற்கனவே குற்ற விசாரணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளதாகவும், அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன் ஏனைய அனைத்து மாகாணங்களுக்கும் குறித்த பிரிவுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)