உர மானியத்திற்கான நிதி வழங்கல் 95% நிறைவு
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உர மானியத்திற்கான நிதி வழங்கல் தற்போது 95% நிறைவடைந்துள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை ரூ.16,369 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் ஜெனரல் யு. பி. ரோஹண ராஜக்ஷ தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நிலவரப்படி, உர மானியங்களுக்காக விவசாயிகளுக்கு 9,889 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டிருந்தது.
இன்றைய (15) தினத்திற்குள் 1,666 மில்லியன் ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அனுராதபுரம், அம்பாறை மற்றும் குருநாகல் மாவட்டங்கள் அதிக மானியப் பணத்தைப் பெற்றுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் யூ. பி. ரோஹண ராஜக்ஷ மேலும் கூறினார்.