மஹியங்கனை – பதியதலாவை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று பஸ் தரிப்பிடத்தில் இருந்த பெண் ஒருவர் மீது மோதுண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பதியதலாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த விபத்தின் வீடியோவினை சகோதர மொழி ஊடகமொன்று வெளியிட்டுள்ளது;
[youtube url=”https://www.youtube.com/watch?v=2DIKpt-hMRc” width=”560″ height=”315″]