நாமலுக்கு எதிரான வழக்கு: பொலிஸாருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷவுக்கு எதிராக 7 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டி தொடரப்பட்ட  வழக்கு ஆவணங்களின் நம்பகத்தன்மையை கண்டறிய நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள கிரிஷ் டிரான்ஸ்வொர்க்ஸ் சதுக்கத்தின் 4.3 ஏக்கர் காணி குத்தகைக்கு 7 மில்லியன் கொடுக்கப்பட்டுள்ளதாக  
தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ஆவணங்கள் சான்றளிக்கப்பட்ட மூலப் பிரதிகளா அல்லது அவற்றின் நகல்களா என குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்க முடியும் என கோட்டை நீதிவான் நிலுபுலி லங்காபுர தெரிவித்தார்.