(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அண்மையில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்கத் தவறிய குற்றச்சாட்டின் பேரில், தவுலகல பொலிஸ் நிலைய பணியில் இருந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டதோடு மேலும் இரு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் WCI மற்றும் சம்பவத்தன்று பணியில் இருந்த குற்றப் புலனாய்வுப் பிரிவின் சப் இன்ஸ்பெக்டர் ஆகிய இரு அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின் பின்னர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்கவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடுகன்னாவ பொலிஸாருக்கும் பிந்தையவர் வெலம்பொட பொலிஸாருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடத்தப்பட்ட தினத்தன்று, சம்பவம் நடந்த இடத்தை அவ்வழியாகச் சென்ற கம்பொல பொலிஸ் அதிகாரி ஒருவர் தவுலகல பொலிஸாருக்கு அறிவித்த போதும், கடமையில் இருந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.