பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய காரில் சென்ற இருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு வடக்கு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் மோட்டார் சைக்கிள் குழு நேற்று (23) கிரான்ட்பாஸ் பகுதியில் திடீர் போக்குவரத்து சோதனையை மேற்கொண்டிருந்தது.

அதற்கமைய, நேற்றிரவு பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கார் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.

மேற்படி சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் இருவரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாகனத்தை பின்தொடர்ந்து சென்று மாளிகாவத்தை பகுதியில் வைத்தே பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

பின்னர், வாகனத்தை சோதனையிட்டபோது அதில் சட்டவிரோத மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.