காலி சிறைச்சாலையில் மோதல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

காலி சிறைச்சாலையில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் இரண்டு கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார்.

இந்நிலையில், காயமடைந்த இருவரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.