ஈ டிக்கட் மோசடி – மேலும் ஒருவர் கைது

ஈ டிக்கட் மோசடி – மேலும் ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ரயில் இணைய பயணச்சீட்டு (ஈ டிக்கெட்) மோசடி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக கண்டி – ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் கண்டி வலய குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, கைதான சந்தேகநபரிடமிருந்து ஈ டிக்கெட்டுக்கள் இரண்டும், கையடக்க தொலைபேசிகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

32 வயதுடைய கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.