இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்றாகும்

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்றாகும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் “தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்” என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்தார்.

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஈடுபடுத்தப்படும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா தெரிவித்தார்.

இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படும்  நாடொன்றை உருவாக்குதல் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் முதன்மை நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கொழும்பு பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதி மூடல்கள் அமல்படுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்தார்.

COMMENTS

Wordpress (0)